Podcast Directory
| Podcast title | Selva Infotainment
|
|
| http://selvaspeaking.mypodcast... | ||
| Description | ||
| Updated | Wed, 03 Dec 2008 22:31:36 +0000 | |
| Category | Education |
|
| Subscribe |
|
|
Vote for this podcast |
||
| Link to this podcast |
|
|
Episodes |
||
|
1. Jolly English - Episode 05 http://feedproxy.google.com/~r... download (octet-stream, 7.22Mb) Description: நான் இதுவரை அறிமுகப்படுத்திய பயிற்சி முறைகள் எபிசோட் 3 =========== Chanting (மந்திரம் போல வார்த்தைகளை உச்சரித்து பழகுவது) எபிசோட் 4 =========== Singing (பாடிக் கொண்டே வார்த்தைகளும் - அர்த்தங்களும் பழகுவது) இந்த எபிசோட் ============== Listening (வார்த்தைகளின் உச்சரிப்பு - அர்த்தம் இரண்டையும் கவனித்தல்) |
||
|
2. Jolly English - Episode 04 http://feedproxy.google.com/~r... download (octet-stream, 6.42Mb) Description: Sing Along இந்த எபிசோடில் 'டெய்ஸி' என்கிற ஆங்கிலப் பாடலை நீங்கள் பாடப் போகிறீர்கள். பாட்டா? நானா? அதுவும் ஆங்கிலப் பாட்டா என்று அலறாதீர்கள்!! டெய்ஸி என்கிற அழகிய இளம் பெண்ணை, ஒரு ஏழை இளைஞன் திருமணம் செய்ய விரும்புகிறான். ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே அவனிடம் உள்ளது. ஒருவேளை அவன் அவளை மணம் செய்தால், திருமண ஊர்வலத்தில் வருகின்ற வாகனத்திற்கு கூட அவனிடம் வசதியில்லை. அவன் அந்தப் பெண்ணிடம் எப்படி தன் திருமண ஆசையை சொல்கிறான் என்பதே இந்தப் பாடல். எதற்க்காக இதைச் சொல்கிறேன் என்றால், அர்த்தம் தெரிந்தால், எதுவுமே எளிது. அதனால்தான் இந்தக் கதையைச் சொன்னேன். தற்போது வெளிவரும் தமிழ் பாடல்களும் ஆங்கிலப் பாடல்கள் போலவே இருக்கின்றன. சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் பாடல் வரிகள் (Lyrics) இருந்துவிட்டால், அந்தப் பாடல்களையும் சுலபமாக பாட முடிகிறது. எனவே நம்முடைய டெய்ஸி பாடலுக்கும் கீழே வரிகளை கொடுத்திருக்கிறேன். பார்த்து படித்துக் கொண்டே பாடுங்கள். கொஞ்ச நேரத்தில் 'அட, நமக்கும் இங்கிலீஷ் பாட்டு வருதேன்னு' ஆச்சரியப்படுவீங்க. மத்தவங்களையும் ஆச்சரியப் படுத்துவீங்க. ரைம்ஸ் கற்றுக் கொள்வதை விட எளிதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கூச்சத்தை தூக்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டு கூடவே பாட ஆரம்பியுங்கள். Daisy Daisy Give me your answer true I'm half Crazy All for the love of you It won't be a stylish marriage I can't afford a carriage But you'll look sweet, upon the seat of a bicyle built for two. |
||
|
3. Jolly English - Episode 03 http://feedproxy.google.com/~r... download (octet-stream, 4.19Mb) Description: Chanting Method : எல்லா பள்ளிகளிலும் 'பிரேயர் சாங்' உண்டு.இரண்டு வயது பள்ளிக் குழந்தைகள் கூட அவற்றை வீட்டில் வந்து அழகாகப் பாடும். எப்படி? தினம் தினம் அந்தப் பாடல் பாடலை கூடவே பாடுவதுதான். எதுவுமே ஒரு தாளத்துடன் பாடல் வடிவில் இருக்கும்போது, நம்முடைய கேட்கும் புத்தி (Listening Skill) ஜாலி மூடுக்கு வந்துவிடுகிறது. அதனால் கேட்கிற எதுவும் நம்மை அறியாமல் நம் மனதில் பதிந்துவிடுகிறது. எத்தனையோ சினிமா பாடல்களை நம்மை அறியாமல் முணுமுணுக்க இதுதான் காரணம். இதை நான் என் வகுப்பறையில் Successfulஆக பயன்படுத்துகிறேன். ஜாலியாக பாடிக்கொண்டே மாணவர்கள் ஆங்கில உச்சரிப்பை கற்றுக்கொள்கிறார்கள். Chanting என்று இந்த முறைக்குப் பெயர் வைத்திருக்கிறோம். அதனால் இனி நீங்களும் பாடல் வடிவில் சில ஆங்கில உச்சரிப்புகளை பழக தயாராகுங்கள். கீழ்க்காணும் வார்த்தைகள் தான் இந்த ஒலிப்பூவில் உள்ளன. பாடலைக் கேட்டுக்கொண்டே இந்த வார்த்தைகளை படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில வார்த்தைகள் வசப்படும். sit, sat, sat spend, spent, spent ring, rang, rung wear, wore, worn sell, sold, sold beat, beat, beaten win, won, won hurt, hurt, hurt sing, sang, sung blow, blew, blown rise, rose, risen ride, rode ridden fly, flew, flown drink, drank, drunk, forget, forgot, forgotten throw, threw, thrown hang, hung, hung, swim, swam, swum If you have any doubts write a mail to : r.selvakkumar@gmail.com |
||
|
4. Jolly English - Episode 02 http://feedproxy.google.com/~r... download (octet-stream, 6.47Mb) Description: Learn English thru Tamil It's fun & learn In this episode learn how to begin a conversation with introduction. ஒருவரை சந்திக்கும்போது அறிமுகம் செய்து கொள்வது எப்படி? நேரம் என்ன ஆச்சு? வீடு எங்க இருக்கு? போன்ற சாதாரண தினசரி உரையாடல்கள். முதலில் கேளுங்கள், புரிந்து கொள்ள வசதியாக ஆங்கிலத்துடன் தமிழ் ஒலிக்கும். ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்துகொள்ளுங்கள் தொடர்ந்து கேளுங்கள், இம்முறை ஆங்கிலத்துடன் ஆங்கிலமே ஒலிக்கும். ஆனால் கூடவே பேசவேண்டும் மேலும் தொடருங்கள், இம்முறை ஆங்கிலக்குரலும் தொடர்ந்து இடைவெளியும் மாறி மாறி ஒலிக்கும். ஆங்கிலக் குரலைக்கேட்டு, இடைவெளியில் நீங்கள் பேசுங்கள். ரெடியா? |
||
|
5. Jolly English - Episode 01 http://feedproxy.google.com/~r... download (octet-stream, 3.74Mb) Description: Learn English thru Tamil It's going to be Fun & Learn ஸ்போக்கன் இங்கிலீஷ் - அறிமுகம் நீங்கள் "ஸ்போக்கன் இங்கிலீஷ் படிப்பது எப்படி?" நான் "ஆங்கில டிக்சனரி, ஆங்கில செய்தித்தாள், ஆங்கில கதைப் புத்தகங்கள் இதையெல்லாம் ஒரு ஓரமா வைச்சிடுங்க." நீங்கள் "அப்புறம் எப்படி ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்கறதாம்?" நான் "இந்த கேள்வியை கேட்கறதை விட்டுட்டு, க்ளிக் பண்ணி ஒலிப்பூவைக் கேளுங்க." இனிமேல் நீங்களும், நானும் ஸ்போக்கன் இங்கிலீஷ்ல தூள் பண்ணலாம் |
||